Aran Sei

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் – தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தமிழ்நாடு அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு மேற்கொண்ட சட்டத் திருத்தம் மதச்சார்பின்மை கோட்பாடு, மத நல்லிணக்கத்திற்கு உகந்தததாக இல்லை என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அகதிகளாக வருவோரை மதரீதியாக பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சட்டத் திருத்தம் அமைந்துள்ளது என தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிய ஒன்றிய அரசு, இலங்கை தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்