Aran Sei

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு; 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு முழு தேர்ச்சி – முதலமைச்சர் அறிவிப்பு

ரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று சட்டபேரவையில் விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பை முதல்வர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இது தொடர்பான அறிவிப்பை வாசித்த அவர், “தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியிலிருந்து ஒய்வு பெறும் வயது, 58-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. அரசுப் பணியாளர்களின் ஒய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பதை, 60 வயதாக உயர்த்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

குண்டு வெடிப்பு வழக்கில் கைதான பாஜக எம்.பி காவல்துறையால் தாக்கப்பட்டாரா? – மஹாராஷ்ட்ரா காவல்துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு, தற்போது அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, மே மாதம் 31ஆம் தேதி அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்றும் முதலமைச்சர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

‘பாஜகவின் வீழ்ச்சியை புதுச்சேரி மக்கள் தொடங்கி வைப்பார்கள்’ – வீரப்ப மொய்லி நம்பிக்கை

சட்டப்பரேவையில் கல்வித்துறை சார்பான அறிவிப்பை வாசித்த முதலமைச்சர் பழனிசாமி, 9,10 மற்றம் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இந்த கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

”2020-21ஆம் கல்வியாண்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காகப் பள்ளிகள் மூடப்பட்டு… இந்தக் கல்வியாண்டு முழுவதும் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணவர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன” என்று முதல்வர் தெரிவித்தார்.

கார்ப்பரேட்டுகள் புதிய வடிவிலான திருடர்கள் – ராகேஷ் திகாயத்

மேலும் “இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றித் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும்” எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்