Aran Sei

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் தாக்கமும் – பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஆய்வறிக்கை.

மிழ்நாடு சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு மற்றும் அதன் தாக்கம் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழக சூழலியல் மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு, அதன் தாக்கம்குறித்து ஆய்வை மேற்கொண்ட பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, “தமிழக சூழலியல் மதிப்பீட்டு அறிக்கை-2021” (TamilNadu Environmental Report Card 2021) என்ற அறிக்கையைத் தயார் செய்துள்ளது.

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – பூவுலகின் நண்பர்கள்

உலகளவில் சூழலியல் சார்ந்த பிரச்சனைகள் அரசியலை தீர்மானிக்கும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்திலும் அதன் சூழலியலானது அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உருப்பெற்றுள்ளதன் அடிப்படையில், தமிழக சட்டமன்ற தேர்தல்- 2021ல் அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும் அது எதிரொலித்துள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அறிக்கைகுறித்து தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு “காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், சென்னை சேலம் எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களில் அரசியல் கட்சிகள் எடுத்துள்ள எதிர் நிலைப்பாடு மற்றும் தொழிற்சாலைகளைவிட விவசாயத்தையே முக்கியமாக நினைப்பது, அரசியல் கட்சிகளின் அணுகுமுறையில் மாற்றம் உண்டாகியிருப்பதை காட்டுகிறது. தொழிற்சாலைகளைவிட விவசாயத்தைதான் தமிழ் அடையாளமாக வரையறுப்பதையும் பார்க்க முடிகிறது” என்று தெரிவித்துள்ளது.

கடலரிப்பு ஏற்பட்டு குமரிமாவட்டம் நீரில் மூழ்கும் அபாயம் – சரக்கு பெட்டக முனையத் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

மேலும் அந்த அறிக்கையில் , தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக தற்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட புயல்களின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகரித்துள்ளது குறித்தும், அரசின் அலட்சிய போக்குகளில் வெள்ள பாதிப்புகளும் அரங்கேறியுள்ளதாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், இலாப வெறிக்கு மணல் சூறையாடப்படுவதால் நிலத்தடி நீர் மட்ட பாதிப்பு, மீத்தேன் போன்ற திட்டங்களால் டெல்டா பகுதிகளில் பாதிப்பு, கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்கள், சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்காகக் காடுகள், மலைகள் அழிப்பு, விவசாய நிலங்கள் கையப்படுத்துதல், நியுட்ரினோ திட்டம், சென்னையை வெள்ள அபாயத்தில் தள்ளப் போகும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் போன்ற திட்டங்களை மக்கள் போராட்டங்களையும் மீறி அரசு செயல்படுத்தவே முயல்வதை இந்த ஆய்வறிக்கை மூலம் அறிய முடியம் எனவும் அந்த அமைப்பு கூறுகிறது.

கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு – 6 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர்.சுந்தர்ராஜன் கூறுகையில் “தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைமைகள் இன்னும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. அதற்கு ஆதாரமாக இந்த ஆண்டு தேர்தல் அறிக்கைகளில் பெரும்பாலான முக்கிய கட்சிகள் யாரும் காலநிலை மாற்றம் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாததை கூறலாம். பொதுமக்களும் சில சமூக செயல்பாட்டு அமைப்புகளும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் இன்னும்கூட கருத்தொருமித்த செயல்பாடுகள் முன்னெடுப்பதில் குறைபாடுகளே உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

இந்த ஆய்வறிக்கையில் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள், அதன் பாதிப்புகள், மக்கள் போராட்டங்கள், அதற்காக தொடரப்பட்ட வழக்குகள் அரசியல் கட்சியின் நிலைப்பாடுகள், அரசின் செயல் திட்டங்கள் போன்றவை விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறுகிறது.

மின்சார செலவை அரசு குறைக்க முடியும் – ஆய்வு

இதுகுறித்து ஆய்வறிக்கை தயாரிப்பில் முக்கிய பங்கெடுத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் “இந்தத் தேர்தலில் சுற்றுச்சூழல் குறித்த பிரச்சினைகள் முக்கிய பேசுபொருளாக அமைந்துள்ளன. கூடங்குளம் முதல் காட்டுப்பள்ளி வரை திட்டங்களுக்கு மக்கள் போராட்டங்கள் வாடிக்கையாகி விட்டன. இது ஒரு ஆரம்பம்தான். இன்னும் தீவிரமான செயல்பாடுகளை அரசியல் கட்சிகள் வரும் காலங்களில் முன்னெடுக்கும். 2021 சட்டமன்றத் தேர்தல் அதற்கான விதையாக அமைந்துள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்