Aran Sei

மக்கள் யார் பக்கம் – தொடங்கியது தமிழக சட்டபேரவை வாக்கு எண்ணிக்கை

டந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் உள்ள 234 தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. பொதுத்தேர்தலில் 72.78 சதவிகித வாக்குகள் பதிவாகியது.

இந்நிலையில், இன்று (மே 2) காலை 8 மணிக்கு, தமிழகம் முழுவதும் உள்ள 76 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகளும், அதற்கடுத்ததாக மின்னணு வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அவை எண்ணப்படும்.

தமிழகத்தில் ஞாயிற்றுகிழமைகளில் பொது ஊடரங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வேட்பாளர்கள், வேட்பாளரின் தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் தொடர்புடைய பணியாளர்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு கொரோனா நெகட்டீவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அல்லது இருமுறை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் – கொலைகுற்றமும் சுமத்தலாம் என்று நீதிமன்றம் கருத்து

மேலும், உடல் வெப்ப பரிசோதனையின்போது, 98.6 பாரன்ஹீட்க்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில், அந்த நபர் அனுமதிக்கப்பட மாட்டார். வாக்கு எண்ணும் மையங்களில் மருத்துவக் குழு ஒன்று தயாராக இருக்கும்.  கொரோனா பரவல் கட்டுப்பாடு நடவடிக்கைகளாக வெற்றி கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில், அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மநீம கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

தமிழக சட்டபேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை போலவே, புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா, அசாம் மாநில சட்டபேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்