Aran Sei

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி கோரும் வழக்கு – இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரும் வழக்கில்,  தமிழக அரசின் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  கூட்டியுள்ளார்.

நாடெங்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்தால், நாளென்றுக்கு 500 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக வழங்கத் தயார் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

ஆக்சிஜனுக்கான தேவை அதிகமாக இருப்பதால் எந்த ஆலை தயாரித்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் என மத்திய அரசும், ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என மாநில அரசும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

‘தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படலாம்; ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும்’: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

ஆலையைத் திறக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதியளிக்க விருப்பமில்லை என்றால் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாமே என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு, “ஸ்டெர்லைட் ஆலையை யார் திறந்தாலும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும், அந்தப் பகுதியில் மீண்டும் ஒரு துப்பாச்சூடு நடைபெறுவதை தமிழக அரசு விரும்பவில்லை” என தமிழக அரசு பதிலளித்திருந்தது.

இந்த வழக்கில் இரு வேறு கருத்துகள் நிலவி வருவதால், தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் பிரமாண பத்திரம் தொடர்பாக கருத்து கேட்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று காலை 9.15 மணிக்கு நடைபெற இருக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்