Aran Sei

உபா சட்டத்தின் கீழ் அதிகரிக்கும் கைதுகள் : இரண்டாம் இடத்தில் தமிழகம்

credits : the indian express

ட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ்  அதிக வழக்குகளைப் பதிவு செய்யும் மாநிலத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரவாத தடுப்புச் சட்டமான, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குக்ளின் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 72 சதவீதம் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் கிடைப்பது அரிது என்றும், இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய, போலீஸ் 180 நாட்கள்வரை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்   கீழ்

2015-ம் ஆண்டு பதியப்பட்ட 897 வழக்குகளில் 1128 பேர் கைது 

2016-ம் ஆண்டு பதியப்பட்ட 922 வழக்குகளில் 999 பேர் கைது 

2017-ம் ஆண்டு பதியப்பட்ட 901 வழக்குகளில் 1554 பேர் கைது 

2018-ம் ஆண்டு பதியப்பட்ட 1182 வழக்க்குகளில் 1421 பேர் கைது 

2019-ம் ஆண்டு பதியப்பட்ட 1226 வழக்குகளில் 1948 பேர் கைது 

என்று உள்துறை அமைச்சகம் விவரம் வெளியிட்டுள்ளது.

மகனின் உடலைக் கேட்டு போராடிய தந்தை மீது வழக்கு – தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

2015-ம் ஆண்டு முதல் 2019-ம்  ஆண்டை ஒப்பிடுகையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை, 72 சதவீதம் உயர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்தேச முக்கள் முன்னணியின் பாலன் கைது – மாவோயிஸ்டின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதால் நடவடிக்கை

2019-ம் ஆண்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், பதியப்பட்ட அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் பதிந்துள்ள மாநிலங்கள் பட்டியலில்,

  • மணிப்பூர் (306 வழக்குகள்)
  • தமிழகம் (270 வழக்குகள்)
  • ஜம்மு-காஷ்மீர் (255 வழக்குகள்)
  • ஜார்கண்ட் (105 வழக்குகள்)
  • அசாம் (87 வழக்குகள்)

ஆகியன இடம்பெற்றுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

எந்த தவறும் செய்யாமல் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த 122 பேர் – ” நஷ்ட ஈடு வேண்டும் “

இந்த வழக்குகளின் கீழ் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கைது செய்யப்பட்ட மாநிலங்கள் பட்டியலில்,

  • உத்தர பிரதேசம் (498 கைதுகள்)
  • மணிப்பூர் (386 கைதுகள்)
  • தமிழகம் (308 கைதுகள்)
  • ஜம்மு-காஷ்மீர் (227 கைதுகள்)
  • ஜார்கண்ட் (202 கைதுகள்)

ஆகிவை இடம்பெற்றுள்ளன.

சிமி வழக்கு: ஒரு குற்றமும் செய்யாமல் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த 122 பேர் விடுதலை

இது தொடர்பாக, மக்களவையில்  மத்திய இணை உள்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், “சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் மாநில காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆகியவற்றால் விசாரிக்கப்படுகின்றன. என்ஐஏவைப் பொறுத்தவரை, பயங்கரவாதம் தொடர்பான வழக்கை விரைவாக விசாரிப்பதற்காக நாடு முழுவதும் இதுவரை 48 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்