Aran Sei

‘கடலின் கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கும் ஒன்றிய அரசு’ – 7 ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த ஏஐடியூசி அறிவிப்பு

மிழ்நாடு ஏஐடியூசி மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் டிசம்பர் 7 அன்று தலைநகர் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் சிஆர்.செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசு நீலப் பொருளாதாரம் என்ற பெயரில்  இந்திய பெருங்கடலின் கனிம வளங்களை அயல்நாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சூறையாட கதவை திறந்து விடுகிறது. இதனை எதிர்த்து தமிழ்நாடு ஏஐடியூசி மீனவத் தொழிலாளர் சங்கம், சார்பில் 2021 டிசம்பர் 7 அன்று டெல்லி நாடாளுமன்றம் முன்னாள்  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

“உலகவர்த்தக அமைப்பின் கட்டளைக்கு அடிபணிந்து இந்தியன் மீன்பிடித் தொழிலுக்கான மானியத்தை குறைக்க கூடாது. இந்திய கடல் மீன் வள மசோதா 2021 கொண்டு வர கூடாது. நாட்டுபபடகுகள் விசைப் படகுகள் உள்ளிட்ட சிறு வகை  மீன்பிடித் தொழிலுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்ட எரிபொருள் வழங்க வேண்டும். இந்திய கடல்பகுதியில் அன்னிய மீன்பிடி கப்பல்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கைகள் அவ்வார்ப்பாட்டத்தில் வைக்கப்படவுள்ளன.

திரைக்கலைஞர் கங்கனா ரணாவத்தின் காரை சிறை பிடித்த விவசாயிகள் – மன்னிப்பு கோரியபின் விடுவிப்பு

மேலும், “அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகும் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேச கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை பாதுகாக்க இந்திய அரசு சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ராஜ்ய ரீதியில்  பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்தியகடல் பகுதியில் 61 நாள் மீன்பிடி அமலில் உள்ள காலத்தில் பிறநாட்டு மீன்பிடி கப்பல்கள் இந்திய கடல் எல்லையில்  சட்டவிரோதமாக மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்து. கடற்கரை சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து கடல்சார் நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கும் சாகர்மாலா திட்டத்தை கைவிட வேண்டும்” என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன.

“மீன்பிடிதடை காலம் 61 நாட்களில் மீனவர்களுக்கு ஒன்றிய அரசு நாடு முழுவதும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மீனவர்சேமநல  நலத்திட்டங்களுக்கு கடல்சார் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு  ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். புயல்மழை உள்ளிட்ட பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று இன்னபிற கோரிக்கைகளையும் வைக்க தமிழ்நாடு ஏஐடியூசி மீனவத் தொழிலாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்