Aran Sei

‘அண்ணா பிறந்தநாளில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவர்’ – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Image Credits: DNA India

செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என  காவல்துறை மானிய கோரிக்கையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும்,  இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று[செப்டம்பர் 11 காவல்துறை மானிய கோரிக்கைமீது  முக்கிய அறிவிப்புகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில்,  காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்றும், ஓய்வு பெற்ற காவலர்களுக்கு நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயமான அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சாதி,மதம், கட்சி பார்க்காமல் நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் , போக்சோ வழக்கை விரைந்து விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் தனி நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்