Aran Sei

நீட் தேர்வு குறித்து ஆராய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை – உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்

Image Credits: Wikipedia

மிழக அரசு  நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகுறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய நடவடிக்கை என மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து, மக்களிடம் கருத்துக்கள் பெற்று அதற்கான தீர்வு குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவை அமைத்து தமிழக அரசு அறிவித்திருந்தது.

சாதி அமைப்பு முறையை உருவாக்கியவர்கள் ஆரியர்களா? ஹரப்பாவினரா? – மரபணு சொல்வது என்ன?

இதை எதிர்த்து பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்ததாகவும், அந்த மனுவில் கடந்த ஜூன் 10 அன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரியிருந்ததாக அந்த செய்தி கூறுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் பதில் தாக்கல் செய்துள்ள ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம், “தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019 ன் படி தான் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் சட்ட ரீதியாகத் அணுக முடியும். எனவே, நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உயர் மட்டக்குழுவை அமைக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை” என்று பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கும் மோடி அரசு – தி இந்து குழுமத்தின் இயக்குநர் என். ராம் குற்றச்சாட்டு

மேலும், இந்த உயர்மட்டக்குழு உச்சநீதி மன்றத்திற்கே எதிரானது என்றும் அந்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மேலும் வருகின்ற 13 அன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப பாணர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்