Aran Sei

‘தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு நடப்பதை விரும்பவில்லை’ : ஸ்டெர்லைட்டின் மனுவிற்கு தமிழக அரசு பதில்

க்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கோரிய ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனுவிற்கு, மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு நடப்பதை விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தது.

நேற்று (ஏப்ரல் 22), அம்மனு விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்திருந்தது.

கொரோனாவை பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிக்கும் வேதாந்தா நிறுவனம் – வைகோ குற்றச்சாட்டு

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 23), உச்ச நீதிமன்றத்தில் இந்த இடைக்கால மனு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று தமிழக அரசு தெரிவித்ததற்கு, இந்தக் காரணத்தை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்துள்ளனர்.

மேலும், மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு நடப்பதை விரும்பவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதற்கு, மக்களின் உயிர் ஆபத்தில் இருக்கும்போது ஏன் ஆலையை திறக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு உரிய பதிலைத் தமிழக அரசு அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு  ஒத்தி வைத்துள்ளனர்.

`ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி இல்லை’ – உச்ச நீதிமன்றம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து, அந்த ஆலை மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்