Aran Sei

முன்மாதிரி அரசுப் பள்ளிகள் திராவிட மாடலுக்கு எதிரானது – பிரின்ஸ் கஜேந்திர பாபு

முன்மாதிரி அரசுப்பள்ளிகள் துவங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பானது, அனைத்து குழந்தைகளுக்கும் சமமான, தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறியுள்ளதிற்கு எதிரானது என்று தமிழ்நாட்டின் பொது பள்ளிக்கான  மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளார்.

‘சமூக வலைதளத்தில் சாதி, மத மோதல் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுங்கள்’ – மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு 2022-2023 பட்ஜெட் அறிவிப்பில், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் எளிதில் சேருவதற்கு 15 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் அதற்கு 125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

இந்த முன்மாதிரி அரசுப்பள்ளிகளில் படிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மட்டுமே சிறப்பான கற்றல் திறன் உள்ளவர்கள் என்ற எண்ணத்தை இது விதைக்கிறது. அரசுப் பள்ளிகளிலேயே இத்தகைய எலைட் பள்ளிகளை உருவாக்குவது என்பது மிகவும் தவறான கொள்கையாகும். இது அனைத்து குழந்தைகளுக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யாது. இது சுயமரியாதை இயக்கம் முன்வைக்கும் திராவிட மாடலுக்கு எதிரானது என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டத்தில் பிற்போக்கு கருத்துகளைப் புகுத்தும் ஒன்றிய அரசு – கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொணர மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

உலக அளவில் புகழ்பெற்றுள்ள பல்கலைக்கழகங்களின் கிளைகள் தமிழ்நாட்டில் திறக்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். உலக வர்த்தக கழகத்தின் காட்ஸ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதன் விளைவாகவே தமிழ்நாடு அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையை ஆறு வழிச் சாலைகளாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இத்திட்டத்திற்கு 135 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

‘தமிழ்நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ளாது இந்தியாவின் வரலாற்றை தெரிந்து கொள்முடியாது’ –ராகுல் காந்தி

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையை விரிவாக்கம் செய்வது சுற்றுச்சூழலைப் பாதிக்கும். ஆதலால் இந்த திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்