Aran Sei

ட்விட்டரில் வதந்தி பரப்பிய தமிழக பாஜகவின் யுவ மோர்ச்சா தலைவர் – வழக்குப் பதிந்த காவல்துறை

ட்விட்டரில் அவதூறான செய்தி வெளியிட்டு வதந்திகளைப் பரப்பியதாக பாஜக உறுப்பினரும், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தமிழ்நாடு தலைவருமான வினோஜ் பி.செல்வம் மீது மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில், சென்னை துறைமுகம் தொகுதியில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்ற பாஜக வேட்பாளரான வினோஜ் பி.செல்வம் ட்விட்டரில் அவதூறான செய்தி வெளியிட்டுப் பொதுமக்களிடையே அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தி, பொது அமைதியைக் குலைக்கும் நோக்கத்தில் உள்ளது என்று சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் பிரிவு 153 (கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுவது), 505(1)பி (அரசுக்கு எதிராகவோ அல்லது பொதுமக்களுக்கு எதிராகவோ குற்றம் செய்ய தூண்டுவது) மற்றும் 505 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செய்தி வெளியிடுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வினோஜ் பி.செல்வம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“பொது அமைதிக்கு எதிராகவும், மத வெறுப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் சமூக வலைத்தள பக்கங்கள் அல்லது வாட்சப்பில் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்