Aran Sei

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் குற்ற வழக்கு புள்ளிவிவரங்கள்

மிழக சட்டசபையில் மொத்தம் எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கொலை முயற்சி தொடர்பான வழக்குகள் உள்ளதென்றும், 204 சட்டமன்ற உறுப்பினர்களில் 68 உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக ஏடிஆர்(Association for Democratic Reforms) அமைப்பு தெரிவித்துள்ளது.

மொத்தம் 38 (19%)சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் இவ்வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனையும், பிணையில் வெளிவர இயலாத வகையில் தண்டனை வழங்க இயலும் என்று ஏடிஆர் தெரிவித்துள்ளது.
மொத்தம் தமிழக சட்டசபையில் உள்ள 157 உறுப்பினர்கள், அதாவது 77 விழுக்காடு உறுப்பினர்கள் கோடிஸ்வரர்கள் என்று தங்கள் சொத்து மதிப்பில் தெரிவித்துள்ளதாகவும் அவ்வமைப்பு கூறியுள்ளது.

துணை காவல் ஆய்வாளர் மகன் மீது புகாரளித்தவர் மர்ம மரணம் – காவல்துறை உடந்தை என குடும்ப உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

89 சட்டமன்ற உறுப்பினர்கள், ஐந்தாம் வகுப்பு தேர்ச்சிக்கும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கும் இடையில் கல்வித் தகுதியைக் கொண்டுள்ளனர் எனவும்,  110 உறுப்பினர்கள் பட்ட்தாரிகளெனவும். 3 உறுப்பினர்கள் தொழிற்நுட்பக் கல்வி பியின்றவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

78 சட்டமன்ற உறுப்பினர்கள் 25 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 125 உறுப்பினர்கள் 51 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், ஒருவர் 77 வயது மிக்கவர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 உறுப்பினர்கள் அதாவது 8 விழுக்காடு உறுப்பினர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியான திமுகவில் 40 உறுப்பினர்கள் மீதும், அதிமுகவில் 21 உறுப்பினர்கள் மீதும், 7 காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதும் கிரிமினல் குற்றங்கள் புரிந்ததற்கான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஏடிஆர்ரின் தகவல் தெரிவித்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட திட்டமில்லை – மாநிலங்களவையில் அமைச்சர் நித்யானந்த் பேச்சு

திமுகவில் உள்ள 22 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும், அதிமுகவில் உள்ள 13 உறுப்பினர்கள் மீதும், காங்கிரஸில் உள்ள 2 உறுப்பினர்கள் மீதும் மிகக் கடுமையான கிரிமினல் குற்றவழக்குகள் உள்ளதாக ஏடிஆர்((Association for Democratic Reforms) அறிக்கை தெரிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் மொத்தம் எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கொலை முயற்சி தொடர்பான வழக்குகள் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்தது தொடர்பான வழக்குகள் உள்ளன.

2800 ஆண்டுகளுக்கு முன் நெல் பயிரிட்ட தமிழர்கள் – ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவில் தகவல்

அதிமுகவின் 109 உறுப்பினர்களில் 76 பேர், திமுகவின் 86 உறுப்பினர்களில் 74 பேர், காங்கிரஸைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்களில் 5 பேர் மற்றும் ஐ.யூ.எம்.எல் மற்றும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ஒரு 1 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளதாக ஏடிஆர் அறிக்கை தெரிவித்துள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்