Aran Sei

கனடாவில் தமிழினப்படுகொலை குறித்த சட்டம் நிறைவேற்றம் – மே 18 தமிழினப்படுகொலை கற்பித்தல் வாரமாக அறிவிப்பு

னடாவில் உள்ள ஆண்டாரியோ மாகாணத்தின் சட்ட சபையில், இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலை குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு போரின் போது உயிரிழந்த தமிழர்களை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 18 உடன் முடியும் 7 நாட்களை, தமிழினப்படுகொலை கற்பித்தல் வாரம் என்று அறிவிக்கும் சட்டம் ஒண்டாரியோ மாகாண சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ருவாண்டா, குஜராத், ஈழ இனப்படுகொலைகளிலும் உலக அரசியலிலும் வலதுசாரி ஊடகங்கள் – பகுதி 5

ஈழத்தில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்து கற்பிப்பதற்கும், இனப் படுகொலை என்று அங்கீகரிப்பதற்குமாக, உலகிலேயே முதன்முறையாக இயற்றப்பட்ட சட்டம் இது என்று, அம்மாகாண சட்டசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் கூறியுள்ளார்.

‘ஈழத்தமிழருக்கும் சிறுபான்மையினருக்கும் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி’ – ஸ்டாலின் குற்றச்சாட்டு

மேலும், தமிழினப்படுகொலை சட்டம் இயற்றப்பட்டதின் வழியாக, இனப்படுகொலை குறித்து உலக மக்களுக்கு நமது கருத்தையும், உணர்வுகளையும் பிரதிபலிக்க முடியும் என்றும், தமிழர்களுக்கு எதிரான மனிதஉரிமை மீறல்கள் குறித்து வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்