லட்சத்தீவின் இயற்கை அழகுக்கு அழியும் சூழல் உருவாகி விடக் கூடாது என திரைக்கலைஞர் ரகுமான் கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில், “லட்சத்தீவில் நடக்கும் நிகழ்வுகள் எனக்கு வேதனை அளிக்கிறது. எவ்வளவு அழகான தீவு. இயற்கை அழகு மட்டுமல்ல. அன்பும், ஒற்றுமையும் நம்பிக்கையும் சேர்ந்ததுதான் லட்சத்தீவின் அழகு. அது அழியும் சூழல் உருவாகிவிடக் கூடாது” என பதிவிட்டுள்ளார்.
லட்சத்தீவுகளின் புதிய நிர்வாகி பிரபுல் கே பட்டேல் முன்மொழிந்துள்ள சட்ட திருத்தங்கள் அந்த மக்களுக்கு எதிராகவும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும் இருக்கிறது என குற்றம்சாட்டும் தீவின் மக்கள். இதற்கு எதிராக போராட்டக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
மக்களுக்கு எதிராக எதேச்சதிகாரத்துடன் செயல்படும் நிர்வாகியை இந்திய ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் பிபி முகமது பைசல் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக மலையாளம் திரைக்கலைஞர் பிருத்விராஜ், கேரள முதலமைச்சர் பின்ராயி விஜயன், கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.