தாலிபான் தலைநகர் காபூல் விமானநிலையத்திலிருந்து குறைந்தபட்சம் 140 ஆப்கான் சீக்கியர்கள், ஹிந்துக்கள் மற்றும் பிறரைத் தாலிபான்கள் அந்நாட்டிலிருந்து செல்ல அனுமதிக்கவில்லை என்று இந்தியாவுக்கான உலக மன்றத்தின்(Indian world forum) தலைவர் புனித் சிங் கூறியுள்ளார்.
இந்திய உலக மன்றத்தின் தலைவர் புனித் சிங் வெளியுறவு அமைச்சகம் (MEA) மற்றும் இந்திய விமானப்படை (IAF) உடன் ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றும் பணியில் ஒருங்கிணைத்து வருகிறார்.
இந்நிலையில், இதனால் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் கடந்த ஆகஸ்ட் 25 அன்றிலிருந்து சிறப்பு இந்திய விமானப்படை விமானம் காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கிறது.
மேலும், கடந்த ஆகஸ்ட் 25 அன்று இரவு பயணிகளைக் விமான நிலையத்திருந்து வெளியே அனுப்பியதாகவும் இந்தியாவுக்கான உலக மன்றம் தெரிவித்துள்ளது.
சுமார் 2௦௦ ஹிந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் இதர நாட்டு குடிமகன்களோடு அந்த விமானம் உத்தரபிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானத்தளத்திற்கு கடந்த ஆகஸ்ட் 27 அன்று காலை வர திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் தொடர்ந்து தாலிபன்கள் தடுத்ததால் அவர்களின் பயணம் தடைபட்டுள்ளது.
source:the hindu
தொடர்புடைய பதிவுகள்:
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.