Aran Sei

‘ஆப்கான் பெண்கள் போராடி பெற்ற உரிமைகள் பறிக்கப்படுவது நெஞ்சை உடைக்கிறது’ – ஐ. நா. அவையின் ஆணையர் கருத்து

ப்கானிஸ்தானில் தாலிபான்கள் நடத்திவரும் வன்முறையை நிறுத்த வேண்டுமெனவும், நிலைமை கைவிட்டு செல்கிறது என்று அந்நாட்டு அரசை ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையர் – செயலர் அன்டோனியோ குட்ரோஸ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “இராணுவ பலத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது  நீடித்த உள்நாட்டுப் போருக்கு அல்லது ஆப்கானிஸ்தானை முழுமையாக தனிமைப்படுத்த மட்டுமே வழிவகுக்கும்” என்று கூறியுள்ளார்.

 

மேலும், தாலிபான் கைப்பற்றியுள்ள பகுதிகளில் மனிதஉரிமைகளுக்கு பெரும் தடை நிலவுவது என்னைப் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும்  பத்திரிகையாளர்களும்  பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும்  அன்டோனியோ குட்ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது,”ஆப்கான் பெண்கள் போராடி பெற்ற உரிமைகள் பறிக்கப்படுவது குறித்த செய்திகளை பார்க்கும் போது மனதை உடைப்பதாகவும், திகிலுட்டுவதாகவும் உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் முக்கிய மாகாணப் பகுதிகளை தாலிபான் கைப்பற்றி வருவது குறித்து தெரிவித்த கந்தகார் பகுதியில் வசிக்கும் பெண், “அரசு உறுதியோடு தாலிபான்களை எதிர்கொள்ளாமல், எங்களை விற்றுவிட்டது” என்றும்   கூறியுள்ளார்.

source: அல் ஜசிரா

தொடர்புடைய பதிவுகள்:

கொலை முழக்கமாகிறதா ஜெய் ஸ்ரீராம்? – உ.பி.யில் முழக்கமிடக்கோரி இஸ்லாமியரை வதைத்த இந்துத்துவ மதவெறியர்கள்

இஸ்லாமியரை தாக்கியவர்களை விடுவிக்கக்கோரி பஜ்ரங்தள் போராட்டம் – காவல்நிலையத்திலிருந்து மூவர் விடுவிப்பு

‘வாக்குறுதிகளை நிறைவேற்றும் வளர்ச்சிக்கான பட்ஜெட்’ – திருமாவளவன்

ஒடுக்கப்பட்டவர்களை மாட்டை விட கீழாக பார்க்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் – காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்