Aran Sei

ஆப்கானிஸ்தானின் 12 முக்கியத் நகரங்களைக் கைப்பற்றிய தாலிபான் – தீவிரமாகிறதா போர்?

தாலிபான்கள் தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள லஷ்கர் காஹ் பகுதியைக் கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைநகர் பகுதியான  கந்தகார் மற்றும் ஹீரெட் பகுதிகளைத் தொடர்ந்து இந்தப் பகுதியையும் கைப்பற்றியுள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை 3௦ நாட்களுக்குள் தாலிபான்கள் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்றும்,  9௦ நாட்களுக்குள்  கைப்பற்றிவிடுவார்கள் என்றும் அமெரிக்க அரசு கூறியிருந்தது.

இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் தூதரக அலுவலர்களை மீட்க  ஆயிரக்கணக்கான படைகளையும்  அனுப்பி வைத்துள்ளது.

மேலும், கந்தகார்  பகுதியைத் தாலிபான் கைபற்றியுள்ளதை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உறுதிபடுத்தியுள்ளதாகவும், இது இந்த ஒரு வாரத்தில் தாலிபான் கைப்பற்றியிருக்கும் 12 வது மாகானத் தலைநகர் பகுதியாகும்.

ஆப்கானிஸ்தானின் அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும், அந்நாட்டு   மக்களுக்கு அதிகப்படியான பாதிப்பு ஏற்படும் வகையில் நகரங்களில் தாக்குதல் நடத்தி வரும் தாலிபான்களைக் கண்டிக்கும் வகையில் அறிக்கை வெளியிடும் வகையில்  ஐ.நா பாதுகாப்பு குழுவினர் ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

source: அல் ஜசிரா  

தொடர்புடைய பதிவுகள்:

வந்தனாவின் வெற்றி தேசத்தின் வெற்றி- நேரில் சென்று சு.வெங்கடேசன் வாழ்த்து

கடந்த மாதம் 31,637 கணக்குகள் முடக்கம் – புகார்களின் மீது ட்விட்டர் நிர்வாகம் நடவடிக்கை

கொலை முழக்கமாகிறதா ஜெய் ஸ்ரீராம்? – உ.பி.யில் முழக்கமிடக்கோரி இஸ்லாமியரை வதைத்த இந்துத்துவ மதவெறியர்கள்

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்