Aran Sei

ஆப்கானிஸ்தானின் மாவட்டங்களை கைப்பற்றிய தாலிபன்கள் – சூழ்கிறதா போர் மேகம்

ப்கானிஸ்தானில் உள்ள 421 மாவட்டங்கள் மற்றும் மாவட்ட மையங்களில் மூன்றில் ஒரு பகுதியை தற்போது  தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில்  வைத்துள்ளதாக  தி இந்து  செய்தி  வெளியிட்டுள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தான் வரை  பேரணியாக  சென்ற தாலிபான்கள்  எண்ணற்ற மாவட்டங்களைக் கைப்பற்றியதாகவும், இதன் காரணமாக தப்பி  ஓடிய ஆப்கான் படை வீரர் தஜிகிஸ்தான் நாட்டின்  எல்லைபகுதிகுள்ளும்  நுழைந்துள்ளதாக  அந்த செய்தி  தெரிவிக்கிறது.

பணிய மறுக்கும்  விவசாயிகள் – மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் அறிவித்த வேளாண் சங்கங்கள்

இந்நிலையில் இதுகுறித்து  தெரிவித்துள்ள  தஜிகிஸ்தான் நாட்டின்  தேசிய பாதுகாப்பு  குழு, கடந்த ஜூன் 3 அன்று,   3௦௦க்கும்  மேற்பட்ட  ஆப்கான் படை  வீரர்கள் மாலை 6.30 மணியளவில் தஜிகிஸ்தான் நாட்டின்  எல்லைபகுதியை தாண்டி  நுழைந்ததாகவும்  அவர்கள்  தெரிவித்துள்ளதாக  தி இந்து  செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர்கள்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மனித நேயக் கொள்கைகள்  அடிப்படையிலும், அண்டை நாட்டோடு  நல்லுறவு ஆகியவற்றின் அடிப்படையில் ஆப்கான் வீரர்களை எல்லைக்குள்  அனுமதித்தாக கூறியுள்ளதாகவும்  அந்த  செய்தியில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழங்குடியின உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமி – உடல்நிலை மோசமடைந்துள்ளதால் பொருத்தப்பட்ட செயற்கை சுவாசம்

கடந்த ஏப்ரல் மாதத்தின் இடைப்பகுதியில்  ஆப்கானிஸ்தானிலிருந்து  அமெரிக்க படைகளை  விலக்கிக் கொள்வதாகவும், என்றென்றும் போர் என்பது  முற்று  பெறும்  என அறிவித்ததற்கு பின்னர், அங்கு  தாலிபான்கள் மாவட்டங்களை  கைப்பற்றத்  தொடங்கியுள்ளதாக தி இந்து  செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  தெரிவித்துள்ள ஆப்கான் உள்துறை அமைச்சகம்,  தோல்வி நிலையானதல்ல, மேலும் அவர்கள்  எவ்வாறு மீண்டும் பகுதிகளைக் கைப்பற்றினர்  என்பது   புரியவில்லை என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த  செய்தி  கூறுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்