Aran Sei

உள்கட்டமைப்பு திட்டங்களை முடித்துக்கொடுக்க வாருங்கள் – இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த தாலிபான்கள்

ப்கானிஸ்தானின் மண்ணை எந்த நாட்டிற்கும் எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் இந்தியா விரும்பினால் இங்கு முடிவடையாமல் உள்ள உள்கட்டமைப்பு திட்டங்களை முடித்துக்கொடுக்க நாங்கள் அழைக்கின்றோம் என்றும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றுடன் பேசுகையில், “ஆப்கானிஸ்தானின் மண்ணை யாருக்கு எதிராகவும் எந்த நாடும், எந்தக் குழுவும் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதில் தெளிவாக இருக்கிறோம். ஆப்கானிஸ்தானில் பல புனரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை இந்தியா உருவாக்கி வருகிறது. அவர்கள் விரும்பினால் முடிக்கப்படாமல் இருக்கும் திட்டங்களை முடிக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில், ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களில் பணிபுரியும் அனைத்து இந்திய தரப்பு பணியாளர்களையும் இந்தியா திரும்பப் பெற்றது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில், இந்தியா சுமார் 3 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது. ஷடூட் அணை, சல்மா அணை, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற கட்டிடம் போன்ற பல முக்கிய திட்டங்களும் பல சாலைகளும் இந்திய உதவியுடன் கட்டப்பட்டுள்ளன.

Source: New Indian Express

தொடர்புடைய பதிவுகள்: யார் இந்த தாலிபான்கள்? – வரலாற்றில் ஒரு பயணம்

ஆப்கானிஸ்தான்: அமெரிக்காவின் தோல்வியும் தாலிபான்களின் மறு வருகையும்

‘ஆப்கானியர்களை கொல்வதையும் அழிப்பதையும் நிறுத்துங்கள்’ – கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் வேண்டுகோள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்