Aran Sei

பத்திரிக்கையாளர்களைக் கடுமையாக தாக்கிய தாலிபான்கள்- ஆப்கானிஸ்தானில் கேள்விக்குறியாகும் பத்திரிக்கை சுதந்திரம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களைத் தாலிபான்கள் தாக்கி கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 8 அன்று, தெற்கு காபூல் பகுதியில் நடந்த பெண்கள் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற  எடிலாட்ரோஸ் செய்தித்தாளைச் சார்ந்த  இரண்டு பத்திரிக்கையாளர்கள் தாலிபான்களால் கைது செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து , அந்தப் பத்திரிகையைச் சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிக்கையின் ஆசிரியருடன்  காவல்நிலையம் விரைந்துள்ளனர்.

இந்நிலையில், தாலிபான்கள் அவர்களைத் தாக்கி அவர்களது தொலைபேசி உட்பட அனைத்து உடைமைகளையும் பறித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள எடிலாட்ரோஸ் செய்தித்தாளைச் சார்ந்தப் பத்திரிக்கையாளர் ஷய்கன், “அவர்கள்(தாலிபான்கள்) கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதனால்  அவர்களால் நடக்கக்கூட முடியவில்லை.   அவர்கள் துப்பாக்கியாலும் தாக்கியுள்ளனர்”. என்றும் கூறியுள்ளார்.

SOURCE:THE WIRE

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்