Aran Sei

‘மாணவியின் மரணத்தை வைத்து மதப்பிரிவினை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’ – மாவட்ட ஆட்சியருக்கு மைக்கேல்பட்டி ஊர்மக்கள் கடிதம்

மாணவி லாவண்யா மரணத்தை வைத்து மத நல்லினக்கத்தோடு வாழும் மக்களை பிரிக்க முயற்சிக்கும் சக்திகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மைக்கேல்பட்டி ஊர் மக்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஊர்மக்கள் எழுதியுள்ள கடிதத்தில், எங்கள் ஊரில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள்,  இஸ்லாமியர்கள் அடங்குவர். எங்கள் ஊர் பழமையான ஊர். இந்நாள் வரையிலும் நாங்கள் மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் ஒரே குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  மத சம்பந்தமாக எந்த ஒரு பிரச்சனையும் நடந்தது இல்லை.  எங்கள் ஊரில் நடைபெற்ற மத சம்பந்தமான திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும் பங்கெடுப்போம்.

எங்கள் ஊரில் இயங்கிக் கொண்டிருக்கின்ற தூய இருதய பள்ளி 163 ஆண்டுகளாக இயங்கி கொண்டு இருக்கிறது. இதில் மொத்த மாணவர்களில் சுமார் 60 சதவீதத்திற்கும் மேல் இந்து மதத்தினர் பயின்று வருகின்றனர். அதேபோல் விடுதியில் இந்து மாணவியரே அதிகம் படிக்கின்றனர். இந்த பள்ளியிலும் மற்றும் ஊரிலும் மதமாற்ற முயற்சி இதுவரை நடந்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் சில மதவாத சக்திகள் மாணவி லாவண்யாவின் மரணத்தை வைத்து மதரீதியான கட்சிகளும் அமைப்புகளும் எங்கள் ஊரில் சகோதரத்துவத்துடன் மத நல்லினக்கத்தோடு வாழ்வதை கெடுக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம். பலத்தரப்பட்ட குழுக்கள் அமைப்பதையும் விசாரிப்பதையும் தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று மைக்கேல்பட்டி ஊர் பொதுமக்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்