Aran Sei

தொழிற்சங்கம் அமைக்கக் கோரும் உணவு விநியோக பணியாளர்கள் – தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு

தைவானில் செயலி வழியாக நேரடியாக வீடுகளுக்கே உணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்கள் தேசிய அளவிலான உணவு விநியோகப்போர் சங்கம் அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

வீடுகளுக்கே உணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் அளிக்கப்படவில்லை என்றும், அதிகப்படியான நேரம் உழைக்க வேண்டியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது- ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதியில், உபெர் ஈட்ஸ், ஃபுட்பாண்டா, கோகோக்ஸ் மற்றும் லாலாமோவ் டெலிவரி போன்ற நிறுவங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தொழிலாளர் அமைச்சகத்தின் முன் தேசிய அளவில் தொழிற்சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியதாகவும் தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தைவானில் ஏறத்தாழ 80,000 உணவு விநியோகிக்கும் தொழிலாளர்கள் பணிபுரிவதாகவும், உபெர் ஈட்ஸ் மற்றும் ஃபுட்பாண்டா போன்ற நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய ஊதியத்திட்டத்தில் தொழிலாளர்களிடம் 10% முதல் 30% பிடித்தம் செய்யப்பட்டதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச உணவை வழங்குங்கள்’ – சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

மேலும், கடந்த 2019 மூன்று தொழிலாளர்கள் பணியின்போது உயிரிழந்ததாகவும், அதன் பின்னர் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளதாகவும் தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்