Aran Sei

மாட்டிறைச்சி விற்க கூடாது எனக்கூறிய வட்டாட்சியர் – பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு அரசு

மாட்டிறைச்சி விற்க கூடாது எனக்கூறிய அவனாசி வட்டாட்சியர் தமிழ்செல்வனை ஊத்துக்குளிக்கு பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்கா அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட கானாங்குளம் கிராமத்தில் இறைச்சி கடை நடத்தி வருபவர் வேலுச்சாமி. இவர் ஊராட்சியின் அனுமதி பெற்று 20 ஆண்டுகளாக அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார்.

கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி

இந்நிலையில், ஜூன் 26 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு வேலுச்சாமியின் கடைக்கு சென்ற அவனாசி வட்டாட்சியர் தமிழ்செல்வன், “மாட்டிறைச்சி விற்க கூடாது” என வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

”மாட்டிறைச்சி விற்கக் கூடாது என அரசு சட்டம் எதுவும் இல்லை. ஊரில் பலர் கடை நடத்திக்கொண்டிருக்க ஏன் என்னிடம் மட்டும் சொல்கிறீர்கள். அனைவரும் நிறுத்தினால், நானும் மாட்டிறைச்சி விற்பனை செய்வதை நிறுத்துகிறேன்” என வேலுச்சாமி வட்டாட்சியரிடம் தெரிவித்தார்.

கட்டாயமதமாற்றம் செய்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கிய அமைப்புகள் – சுயவிருப்பப்படி மதம்மாறியதாகப் பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்த பெண்

இதற்குப் பதிலளித்த வட்டாட்சியர், சட்டம் தெரியாமல் இங்கு வந்து பேசவில்லை, மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது என்று கண்டிப்புடன் கூறினார்.

இந்த காணொளி சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. வட்டாட்சியருக்கு எதிராக பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வட்டாட்சியர் தமிழ்செல்வனை, ஊத்துக்குளிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்