Aran Sei

‘ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்களைப் பணி நீக்கம் செய்யக் கூடாது’ – தமிழ்நாடு அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்வதைக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, இன்று(நவம்பர் 29), அக்கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்வதைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. கொரோனாவின் பாதிப்பு தமிழ்நாட்டில் அதிக அளவில் இருந்தபோது, தற்காலிகமாக மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதார ஆய்வாளர்களும், மருத்துவப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

திரும்பப்பெறப்பட்ட விவசாய சட்டங்கள்: மக்களவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றம்

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிறந்த முறையில் சேவையாற்றினர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் உறவினர்களே செல்லத் தயங்கிய நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் தாயுள்ளதோடு செயலாற்றியவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களுமே.

மேலும், சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், டெங்கு போன்ற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களும், செவிலியர்களும் சிறந்த முறையில் செயலாற்றியுள்ளனர். அவர்களுக்குப் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத இச்சூழலில், இம்மாத இறுதியுடன் பணியில் இருந்து நின்றுவிடுமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

கலப்பைகள் கார்ப்பரேட்டுகளை உழுது அகற்றிய திருநாள் இன்று – சு.வெங்கடேசன்

இதற்காக, எழுத்துபூர்வமாகவும், வாய்மொழியாகவும் அவர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இத்தகைய நடவடிக்கை பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது. கொரோனா மூன்றாவது அலைக்கான எச்சரிக்கையை நிபுணர்கள் விடுத்த நிலையில், ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்வது அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்வதைக் கைவிட வேண்டும். பல மாதங்களாக நிலுவையில் உள்ள அவர்களின் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

‘மன்னிப்பு மசோதாவை விவாதமின்றி நிறைவேற்றியது ஒன்றிய அரசு’- சு.வெங்கடேசன்

மேலும், ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவப் பணியாளர்களை மருத்துவப் பணியாளர் நியமன வாரியம் மூலம் நிரந்தர அடிப்படையில் தமிழக அரசு நியமிக்க வேண்டும் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்