Aran Sei

‘பார்ப்பனிய கட்டமைப்பும் ஆணாதிக்க சிந்தனையும் கொண்டதுதான் பிஎஸ்பிபி பள்ளி’ – டி.எம்.கிருஷ்ணா விமர்சனம்

த்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி (பிஎஸ்பிபி) சாதியத்தை வளர்க்கும் பார்பணிய கட்டமைப்பைக் கொண்டது என்றும் பாலியல் துன்புறுத்தலை பேசக்கூடாத அசிங்கமான விஷயமாக எண்ணுகிற ஆணாதிக்க சிந்தனையும் கலாச்சாரமும் அந்நிர்வாகத்துடையது என்றும் இசை கலைஞரும் எழுத்தாளருமான டி.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

இதுதொடர்பாக, அரண்செய்க்கு அவர் அளித்த நேர்காணலில், “பிஎஸ்பிபி கல்வி நிறுவனம் வளர்க்கும் சிந்தனையிலும் கலாச்சாரத்திலும் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. அந்நிறுவனம் சாதியாதிக்கத்தை வளர்க்கும் நிறுவனம் என்பதை வெளிப்படையாக சொல்கிறேன். பார்பணிய கட்டமைப்பைத்தான் அந்த பள்ளி கொண்டுள்ளது. இப்போது அப்பள்ளியின் மேல் வந்திருக்கும் பாலியல் புகார் கோரமான விஷயமாக உள்ளது.” என்று குறிப்பிட்டார்.

“இப்புகார் தொடர்பாக, அப்பள்ளி நிறுவனம் வெளியிட்டுள்ள கடிதத்திலேயே அவர்களின் சிந்தனை தெரிகிறது. ‘பாலியல் துன்புறுத்தல்’ என்ற வார்த்தையே அதில் இல்லை. குறைந்தபட்சம் இது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு என்றுகூட அதில் இல்லை. ஏனென்றால், அந்த வார்த்தையைச் செல்வதிலேயே அவர்களுக்குப் பிரச்சனை இருக்கிறது. அப்பள்ளியின் சிந்தனையில் பிரச்சனை இருக்கிறது. ஆணாதிக்க சிந்தனைதான் அவர்களிடம் உள்ளது. இந்த மாதிரியான விஷயங்களைப் பேசக் கூடாது அசிங்கமான விஷயம் என்று எண்ணுகிற சிந்தனை அவர்களுடையது.” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், “பாஜகவின் அடிப்படை அரசியலே சாதியாதிக்க வன்முறைதான். ஒரு சிறுவனுக்குச் சாகா என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான சிந்தனையைப் புகுத்துவது வன்முறை. அத்தகைய சிந்தனையும் செயற்பாடும் வன்முறை. இதைதான் பாஜக, ஆர்எஸ்எஸ் செய்கிறது.” என்று பாடகர் டி.எம்.கிருஷ்ணா விமர்சித்தார்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்