Aran Sei

‘இப்போது பேச வேண்டியது மக்களிடம்தானே தவிர மனதிடம் அல்ல’ – பிரதமரின் மன்கி பாத் பேச்சுக்கு ராகுல் காந்தி பதில்

நாட்டில் ’நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டது’ என்றும், கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவுவது கட்சியின் கடமை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை நாட்டை உலுக்கி வருவதாகவும், மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து சக்திகளைக் கொண்டு செயல்பட்டு வருவதாக மக்களுக்கு உறுதியளிக்கும் விதமாக பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக ராகுல் காந்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ” நிர்வாகம் செயலிழந்துவிட்டது, இந்த நேரத்தில் மக்களுக்காக பேச வேண்டியது அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.

”இந்த நெருக்கடியில், நாட்டிற்கு பொறுப்பான குடிமக்கள் தான் தேவை. எனது காங்கிரஸ் சகாக்களை அனைவரும் அரசியல் பணிகளை ஒதுக்கி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மாறாக, நாட்டு மக்களில் வலியைக் குறைக்கவும், அவர்களுக்குத் தேவையான  அனைத்து உதவிகளையும் செய்துடுமாறு கோரிக்கை வைக்கிறேன்” என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்