Aran Sei

சாக்கடையை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்ட தொழிலாளர் – மனம் உடைந்து தற்கொலை

கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அளிக்கப்படாமல் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்ட துப்புரவு பணியாளர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான நாராயணா, துப்புரவு தொழிலாளராக நகராட்சியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 2 ஆம் தேதி, முக கவசம், கையுறை என எந்த பாதுகாப்பு உபகரணமும் இன்றி, பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய, நாராயாணா நகராட்சி அதிகாரிகளால் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையானதையடுத்து, பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பாதாள சாக்கடையை சுத்தம் செய்ததற்கு தானே காரணம் என ஒப்புக்கொள்ள கூறி, நகராட்சி அதிகாரிகள் நாராயணாவை கடுமையாக துன்புறுத்தியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

” குரலற்றவர்களின் குரலாக, உண்மைக்காக போராடுகிறேன் ” – பிரசாந்த் கனோஜியா

இதற்கு நாராயணா உடன்பட மறுத்ததால், பல்வேறு காரணங்களைக் கூறி அவரது சம்பளத்தைப் பிடித்து வைத்தும், அவரை பலமுறை பணியிலிருந்து இடைநீக்கம் செய்தும் நகராட்சி நிர்வாகம் துன்புறுத்தியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5000 கடனைத் திருப்பிச் செலுத்தாததால் பழங்குடியினர் ஒருவர் எரித்துக் கொலை

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட நாராயணா எழுதி வைத்துள்ள கடிதத்தில், ”நகராட்சியின் உயர் அதிகாரிகளான சுரேஷ் குமார், முருகேஷ், காசிம் கான் ஆகியோர், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி நானே பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய சென்றதாக கூறும்படி என்னை கடுமையாக துன்புறுத்தினர்” என தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

’எல்லோருடைய வீட்டிலும் அம்பேத்கர் புகைப்படம்’ : விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

நாராயணாவின் மரணத்தை கண்டித்து மட்டூரில், கர்நாடக நகர உள்ளூர் அமைப்புகளின் ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்தியுள்ளன. வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி, அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

சமூக மாற்றத்திற்கு வித்திட்ட அறிவொளி: மானமிகு தோழர் ம.சிங்காரவேலர் – விக்ரம் கௌதம்

நாராயணா குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்படாவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் துப்புரவு தொழிலாளர்களும் எச்சரித்துள்ளதாக தி வயரி-ல் வெளியான செய்தி கூறுகிறது.

’சுடுகாடு செல்லும் பாதை தலித் மக்கள் அனைவருக்கும் உள்ளதா?‘ – தமிழக அரசிடம் உயர்நீதி மன்ற மதுரை கிளை கேள்வி

இந்தியாவில், மனித கழிவை மனிதரே அகற்றுவது, பாதாள சாக்கடை, செப்டிக் தொட்டிகள் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு ஆட்களை பணியமர்த்துவது சட்டவிரோதமாகும். ஆனாலும், இந்த பணிகளில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் சட்டத்திற்கு விரோதமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்