Aran Sei

‘பாஜக, உயர்சாதி இந்துக்களுக்கான கட்சி’ எனக் கூறும் ஆய்வறிக்கை – எதிர்ப்பு தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி

பாஜக, உயர்சாதி இந்துக்களுக்கு ஆதரவான கட்சி என, அகமதாபாத் ஐஐடியில் சமர்பிக்கப்பட்டிருக்கும் முனைவர் பட்ட ஆய்வறிக்கைக்கு, பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, எதிர்ப்பு தெரிவித்துள்ளாதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஐஐடியின் இயக்குனர் எரோல் டிசோசா தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், மூன்று கட்டுரைகளைக் கொண்ட ’தேர்தல் ஜனநாயகம்’  என்ற ஆய்வறிக்கைக்கு, முனைவர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு – மராட்டிய இடஒதுக்கீடு வழக்கின் முடிவைப் பொறுத்து விசாரணை

இது தொடர்பாக பிரதமர்மோடிக்கு சுப்ரமணியன் சுவாமி கடிதம் எழுதியதை அடுத்து, ஆய்வறிக்கையின் நகலை பகிருமாறு, அகமதாபாத் ஐஐடி நிர்வாகத்திடம் மத்திய கல்வி அமைச்சகம் கோரியிருந்தது.

சுப்ரமணிய சுவாமி தனது கடிதத்தில், பிரதமர் உயர்சாதியை சேர்ந்தவர் அல்ல என்றும் இது போன்ற சித்தரிப்புகள், பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களால் இந்தியா ஒருபோதும் “ஒரு நாடு” அல்ல என்றும் அதன் சமூகம் ஒருபோதும் ஒன்றுபடவில்லை என்றும் காட்ட “பிரச்சாரம் செய்யப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

‘பாஜக ஆட்சியில் தலித்துகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ – மாயாவதி விமர்சனம்

சுயாதீன பேராசிரியர்கள் மூலம், ஆய்வறிக்கையை “மறுபரிசீலனை செய்ய” அகமதாபாத் ஐஐடிக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்றும், அதுவரை முனைவர் பட்டம் வழங்குவதை நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும், சுப்பிரமணியன் சுவாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

ஆய்வறிக்கையின் நகலைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்ட கல்வி அமைசகத்திற்கு கடிதம் எழுதியுள்ள அகமாதாபாத் ஐஐடி இயக்குநர் ஏரோல் டிசோசா, ஆய்வறிக்கை தொடர்பாக புகார்களை விசாரிக்க கல்வி அமைச்சகம் நடுவர் அல்ல எனத் தெரிவித்திருந்ததாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

நிலத்தை அபகரிக்க உயர்சாதியினர் முயற்சி – எதிர்ப்பு தெரிவித்ததால் கொல்லப்பட்ட தலித் செயல்பாட்டாளர்

ஐஐடியின், ‘ஆய்வறிக்கை ஆலோசனை மற்றும் தேர்வுக் குழு’ ஆய்வறிக்கையைப் படித்ததாகவும், அதன் பகுதிகள் கருத்தரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வியாளர்களிடம் வழங்கப்பட்டன என்றும், ஆட்சேபனை இருப்பவர்கள் அதைக் கருத்தரங்கில் எழுப்பியிருக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்