Aran Sei

அவைத்தலைவரிடமிருந்து ’இந்தியில் ஏதோ ஒன்று வந்திருக்கிறது’ – சு.வெங்கடேசன்

புதிய பாராளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கான அழைப்பிதழ், மீண்டும் இந்தி மொழியில் அனுப்பப்பட்டுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாடாளுமன்ற அவைத்தலைவர் ஓம் பிர்லாவிடம் இந்தியில் வந்துள்ள கடிதத்தை வெளியிட்டுள்ளார். மேலும், ”தமிழக எம்பிக்களுக்கு இந்தியில் மட்டும் கடிதம் அனுப்பப்படுவது தொடர்பாக நான் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு நாளை (டிசம்பர் 8) விசாரணைக்கு வருகின்ற நிலையில் இன்று (டிசம்பர் 7) நாடாளுமன்ற அவைத்தலைவரிடமிருந்து இந்தியில் ஏதோ ஒன்று வந்திருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

`எங்களுக்கு இந்தி மொழியில் கடிதம் எதற்கு’ – சு.வெங்கடேசன் கேள்வி

மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், ”நமது தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 1927 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இன்று அந்தக் கட்டட உருவாக்கத்திற்கு 90 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் எல்லைகளும், இரு அவைகளும் விரிவாக்கம் அடைவதற்கும், எதிர்காலத்தில் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகளை கணக்கில்கொண்டு புதிய கட்டிடத்திற்கான வேலைகள் தொடங்கி இருக்கின்றன.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, வரும் டிசம்பர் 10 ஆம் தேதி, மதியம் ஒரு மணிவாக்கில் இந்திய பிரதமர் அவர்களின் தாமரைக் கரங்களால் திறந்து வைக்கப்பட இருக்கிறது என்பது நாட்டின் அனைத்து மக்களுக்கும் இது பெருமைக்குரிய விஷயமாகும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மீண்டும் இந்தி திணிப்பா? – மத்திய உள்துறைக்கு எதிராக சு.வெங்கடேசன் பொதுநல வழக்கு

புதிய கட்டிடத்தின் பணிகள் தற்போதைய கணிப்பின்படி அக்டோபர் 2022-க்குள் நிறைவடைந்து விடும். நாட்டின் 75வது சுதந்திர தின கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று  அக்கடித்ததில் ஓம் பிர்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் என்பது அனைத்து குடிமக்களுக்கும் ஜனநாயகத்தில் நம்பிக்கை எதிர்பார்ப்பு மற்றும் நாட்டின் பெருமையின் அடையாளமாகும் என்றும் இந்த உணர்வுகள் மற்றும் மக்களின் தேசிய அபிலாசைகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடம் உருவாக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

‘ஆய்வு குழுவில் சாதியா?’ 32 எம்.பி.க்கள் குடியரசு தலைவருக்கு கடிதம்

மேலும், “தற்போதைய கொரோனா நெருக்கடியை மனதில் கொண்டு, அடிக்கல் நாட்டுவிழா மக்களவைத் தொலைக்காட்சி / தூர்தர்ஷன் மூலம் ஒளிபரப்பப்பட இருக்கிறது. தொலைக்காட்சி மூலம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் இணைந்திருக்கும் படி வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.” என்று நாடாளுமன்ற அவைத்தலைவர் ஓம் பிர்லா, மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு இந்தியில் வந்துள்ள வந்துள்ள கடிததில்  கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்