தனிமைப்படுத்துதல் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள ஆவணத்தில், தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் அதியோகி சிலை இடப்பெற்றிருப்பதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்கள் வாரியாக தனிமைப்படுத்துதல் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகத்தின் பாரம்பரிய சின்னங்கள் இடம் பெறுவதற்கு பதிலாக, ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை இடம் பெற்றுள்ளது.
மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை வைத்துள்ளது இந்திய விமான நிலையங்கள் ஆணையம். @AAI_Official
வன்மையான கண்டனம்.
உடனே மாற்று. https://t.co/jgca0XRhD2 pic.twitter.com/R2C5CElfrb— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 13, 2021
இதற்கு கண்டணம் தெரிவித்து சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை வைத்துள்ளது இந்திய விமான நிலையங்கள் ஆணையம். வன்மையான கண்டனம்,உடனே மாற்று”. என்று கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.