Aran Sei

மத்திய அரசு அல்ல ஒன்றிய அரசு – பாஜக எம்.பி தலைமையிலான நாடாளுமன்ற குழு அறிக்கை

Credit: The Wire

ந்திய அரசாங்கத்தை மத்திய அரசு என்பதற்குப் பதிலாக ஒன்றிய அரசு என்று அழைக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் குமார் மோடி சமர்ப்பித்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துவது பொருத்தமற்றது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியாளர், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதித்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மார்ச் 24 தேதி நாடாளுமன்றத்தில் அதன் அறிக்கையை சமர்பித்தது.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

அமைச்சகத்தின் மானிய கோரிக்கைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ”மத்திய அரசு என்ற வார்த்தையை இந்திய ஒன்றியம் என்று மாற்ற வேண்டும். அதிகாரத்தின் மூன்று பிரிவுகளான நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறையை இந்திய ஒன்றியத்தின் அதிகாரிகள் என்று அழைக்கப்பட வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைக்குழுவின் இந்த ஆலோசனை அவர்களின் அதிகார வரம்புக்கு அப்பாற்ப்பட்டது என அமைச்சகம் கூறியுள்ளது.

செய்யப்படும் பரிந்துரை குறித்து தெளிவாக இருப்பதாகவும் அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்படுவதாகவும்  நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

மேலும், அமைச்சகத்தின் அவமரியாதையான மற்றும் அக்கறையற்ற பதிலால் மகிழ்ச்சியடையவில்லை என குழு குறிப்பிட்டுள்ளது.

‘அதிகாரப் பசியால் எனது உறவினர்களையும் கட்சியினரையும் பாஜக குறி வைக்கிறது’ – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

இந்திய அரசியல் சாசனத்தின் 5வது பிரிவில் ஒன்றியம் என்ற சொல்லுக்கு அளிக்கப்பட்டிருக்கும் விளக்கத்தை மேற்கோள் காட்டிய குழு, மத்திய நிர்வாகத்துறை, சட்டமன்றம், நீதித்துறை ஆகிய 3 பிரிவுகளையும் ஒன்றிய அரசின் அங்கங்களாக கருதினர் என்பது தெளிவாகிறதுஎன கூறியுள்ளது.

 இந்திய அரசியலமைப்பை சட்டத்தை உருவாக்கும் போது, ‘மத்திய அரசுஅல்லதுஒன்றிய அரசுஇதில் எது பயன்படுத்தப்பட்டது என்பதை அமைச்சகம் தெளிவுபடுத்துமாறு நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

Source: The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்