Aran Sei

“வரிவருமானம் குறையுமென்பதால், 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் கீழ் வராது” – சுஷில் குமார் மோடி

னைத்து மாநிலங்களுக்கும் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வர முடியாது என்று பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

இன்று (மார்ச் 24), மாநிலங்களவையில் நிதி மசோதா,2021 மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியுள்ள சுஷில் குமார் மோடி, “மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளின் வழியாக ரூ .5 லட்சம் கோடி வசூலிக்கின்றன. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வர முடியாது. ஏனென்றால், ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்க எந்த மாநிலமும் தயாராக இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை – அரசுக்கு வருவாய் இழப்பில்லாமல் லிட்டருக்கு ரூ 8.5 வரி குறைக்க முடியும்

“தற்போது, ​​பெட்ரோலிய பொருட்களுக்கு 60 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டியின் கீழ் 28 சதவீத வரி வசூலித்தால், ரூ .2 லட்சம் கோடியில் இருந்து 2.5 லட்சம் கோடி வரை, மத்திய, மாநில அரசுகளுக்கு வரி பற்றாக்குறை ஏற்படும். அதாவது, தற்போது லிட்டருக்கு ரூ .60 வசூலிக்கப்படுவதற்கு பதிலாக, ஜிஎஸ்டியின் கீழ் ரூ .14 மட்டுமே வசூலிக்கப்படும்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய வரிவிதிப்பின்படி, பெட்ரோல் அல்லது டீசல் விலை லிட்டர் ரூ .100 என்றால், மொத்த வரி ரூ .60-யில் மத்திய அரசிற்கு ரூ .35-ம், அந்தந்த மாநிலங்களுக்கு ரூ .25-ம் கிடைக்கும் என்று சுஷில் குமார் மோடி விளக்கியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்