Aran Sei

‘தமிழகத்தின் உரிமைகளை மிட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக உங்கள் குரல் ஒலிக்கட்டும்’ – முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து

சுவாசிப்பதற்கு ‘உயிர் காற்று’கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, நடிகரும் அகரம் ஃபவுண்டேஷன் நிறுவனருமான சூர்யா அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘முடியுமா நம்மால் ?’ என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம் . ‘முடித்தே தீருவோம் !’ என்பது வெற்றிக்கான தொடக்கம் . – முத்தமிழ் அறிஞர் கலைஞர் ” என்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சொற்களை வாதலைவாசகமாக எழுதியுள்ள சூர்யா “முடித்தே தீர வேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்களின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.

“சுவாசிப்பதற்கு ‘உயிர் காற்று’கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்.” என்று தனது நம்பிக்கை மெய்பட வாழ்த்தியுள்ளார்.

தமிழகத்தின் உரிமைகளை மிட்க, தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும் என்றும் நடிகர் சூர்யா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்