Aran Sei

‘ஆட்கொல்லி புலியை உயிரோடு பிடித்தவர்கள் என்கவுன்டர் என்ற பெயரில் மனிதர்களை சுட்டுக் கொல்கின்றனர்’ – காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்

ட்கொல்லி புலியை உயிரோடு பிடித்தவர்கள், என்கவுன்டர் என்ற பெயரில் மனிதர்களை சுட்டுக் கொல்வதைக் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் ( JAACT) கண்டித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித உரிமையைப் பாதுகாப்பேன் என்ற உறுதியேற்போடு சைலேந்திபாபு தமிழ்நாடு மாநில காவல்துறை இயக்குனராக (DGP) பொருப்பேற்ற 106 வது நாளில் என்கவுன்டர் என்ற பெயரில் இதுரை தமிழ்நாட்டில்,  போலி மோதல் மூலம் 2 நபர்கள் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த மனித உரிமை மீறல் செயலை காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் ( JAACT) வன்மையாக கண்டிக்கின்றது.

அதானியிடம் கையளிக்க பணியாளர் குடியிருப்பை காலி செய்ய உத்தரவிட்ட ஏர் இந்தியா – காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஊழியர்கள் முடிவு

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொருப்பேற்ற நிலையில், மாநில காவல்துறை இயக்குனராக (DGP) சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இதன் பின்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லையில் ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முர்தாஷா சேக் என்பவர் 11.10.2021 அன்று போலீசாரால் பிடிக்கப்பட்ட நிலையில், அதன்பின்பு சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜார்கண்ட் மாநில இளைஞர் முர்தாஷா சேக் சுட்டுக் கொல்லப்பட்டு அவரது இரத்தம் காய்வதற்குள் மீண்டும் என்கவுன்டர் என்ற பெயரில் தூத்துக்குடி மாவட்டம் சூலையன் கரிசல் திரவிபுரத்தை சேர்ந்த துரைமுருகன் (33)  என்பவர் 15.10.2021 நேற்று, தூத்துக்குடியை அடுத்த முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் கொலை வழக்கு சம்பந்தமாக போலீசாரால் பிடிக்கப்பட்ட நிலையில், அதன் பின்பு எஸ்.ஐ ராஜபிரபு தலைமையினால தனிப்படை போலீசார் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நடந்து முடிந்த இரண்டு சம்பவங்களும் போலி மோதல் சாவுகள் ஆகும்.

கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் நியமனம் – விதிமீறல் நிகழ்வதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் ஆட்க்கொல்லி புலியைச் சுட்டுக் கொல்லாமல் அதனை உயிரோடு பிடிப்பதற்கு 21 நாட்கள் தொடர் முயற்சிக்குப் பின் பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றத்தில் ஈடுபடக்கூடிய சக மனிதர்களைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முன்வராத தமிழ்நாட்டு போலீசார் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு சுட்டுக் கொல்வது என்பது கொலைக் குற்றமாகும். இந்த மனித உரிமை மீறல் சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடியில் போலி மோதல் சாவு மூலம் கொல்லப்பட்டவரின் சாதியினரை திருப்திபடுத்த இனி பிற சாதிகளைச் சேர்ந்த சிலரை போலீசார்  என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்ல வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க போலீசாரின் சட்டவிரோத செயலை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தொடர்ந்து நடந்து வரும் போலி மோதல் சாவு வழக்கினை மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து சுயமோட்டா வழக்காக எடுத்து சிறப்பு விசாரணைக் குழு ஏற்படுத்தி விசாரணை செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் தியாகு, செயலாளர் மீ.த. பாண்டியன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்