Aran Sei

‘2022 உ.பி. சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும்’ – ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்துவதாக மாயாவதி குற்றச்சாட்டு

த்தரபிரதேச மாநிலத்தில் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய தேர்தலுக்கு முந்தையைக் கணிப்பின் வாயிலாக அம்மாநில மக்களை செய்தி நிறுவனம் தவறாக வழிநடத்துவதாக பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

வரும் 2022 அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 40 விழுக்காடு வாக்குகள் பெற்று பாஜக வெற்றி பெறும் என்றும் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள மாயாவதி, “கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொருளாதாரம் 1991 ஆம் ஆண்டை போல வீழ்ச்சியடைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், “நாடு முழுவதுமே பாதிப்படைத்துள்ளது. ஆனால், நேற்று தொலைக்காட்சி ஒன்று வரும் சட்டமன்றதேர்தலில் பாஜக 40 விழுக்காட்டுக்கும் மேல், சென்ற முறையை விட அதிகமாக பெறும் என்று செய்தி வெளியிட்டிருந்தது. இது கேலித்தனமாகவும், தவறாக வழிநடத்துவதாகவும் தோன்றுகிறது”. என்றும் குறிப்பிட்டுள்ளார்.

source: the indian express

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்