Aran Sei

காசி கயான்வாபி மசூதியின் கீழ் இந்து கோவிலுக்கான தடயங்கள் உள்ளதா – அறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

த்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கயான்வாபி மசூதி பகுதியின் கீழ், இந்துக் கோவில் இருந்ததற்கான தடயம் உள்ளதா என்று ஆராய வேண்டுமென இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஆக்ரா கோட்டையின் கீழ் கிருஷ்ணர் சிலை புதைக்கப்பட்டுள்ளது – கிருஷ்ணஜென்மபூமி நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் புதிய மனு

இதுகுறித்து  வாரணாசி நீதிமன்றம் , ஐவர் குழு அமைத்துக் கயான்வாபி மசூதி அருகாமைப்பகுதிகளின் கீழ் கடவுள் சிலைகளோ , கோவில் கட்டமைப்புகளோ உள்ளதா என ஆராய வேண்டும் எனவும் , இந்தக் குழுவின் உறுப்பினராக 2 சிறுபான்மையினரை நியமிக்க வேண்டும் எனவும் இந்திய தொல்லியல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

, இந்துக் கோவிலை இடித்து விட்டு மசூதி அமைக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்து வரைபடங்களோடு முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து  செய்தி கூறுகிறது.

வாரணாசி ஞானாபி மசூதியை அகற்றக் கோரி மனு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மேலும் ,இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வை மேற்கொள்ளும் இந்திய தொல்லியல் துறையின் ஐவர் குழுவைக் கண்காணிக்க வல்லுனர் ஒருவரை இந்தக் குழுவின் பார்வையாளராக நியமிக்க வேண்டும், குறிப்பாக மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வியாளராக இருக்கலாம் எனவும் வாரணாசி கீழமை நீதிமன்றம் கூறியுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது

விஷ்வ ஹிந்து பரிஷித் நடத்திய பேரணியில் வன்முறை – மசூதியின் மீது பறக்கவிடப்பட்ட காவிக் கொடி

முகலாய அரசர் அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் சில பகுதிகளை இடித்து விட்டுக் கயான்வாபி மசூதி கட்டப்பட்டது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையின்போது வாரணாசி கீழமை நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்