மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம், மருந்தகம் செயல்பட்டு வருகிறது என்று சொல்லியிருக்கலாமே? என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெபி. நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்திருந்தார். மதுரையில் பாஜகவின் பல்துறை வல்லுனர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார்” என்று தெரிவித்திருந்தார்.
ஜெ.பி.நட்டாவின் கூற்றை பலர் பகடி செய்து வருகின்றனர். இது குறித்து பேசியிருந்த மதுரை நாடாளுமன்ற சு.வெங்கடேசன், “சாவர்கர் புல்புல் பறவையில் இருந்து வந்தது போல் ஒரே இரவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நடந்துள்ளதா என ஆய்வு செய்தோம். கட்டுமான பணிகள் துவங்காமல் 95 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளதாக ஒரு கட்சியின் அகில இந்திய தலைவர் பொய் சொல்வது ஏற்புடையதல்ல என்று கூறியிருந்தார்.
தற்போது ஜெ.பி.நட்டாவின் கூற்றை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பகடி செய்துள்ளார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், , “மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் நட்டா ஏன் நிறுத்திக் கொண்டார்? பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே?
உத்தரகாண்ட்: பாலியல் தொழிலுக்கு வர மறுத்த பெண் படுகொலை – கைதான பாஜக தலைவரின் மகன்
பூர்த்தியான இன்னொரு பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? பூர்த்தியான இன்னொரு பகுதியில் மருந்தகம் செயல்பட்டு நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?” என்று கிண்டல் செய்துள்ளார்.
Madras High Court Grants permission for RSS Rallies in 51 Places in Tamilnadu | Deva’s Update 28
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.