மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டி உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி வினீத் சரண், தினேஷ் மஹேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து பதிலளிக்க ஒன்றிய அரசு, மேற்குவங்க மாநில அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
மேலும், அந்த மனுவில், மேற்குவங்கத்தில் தேர்தலுக்குப் பின் நடந்த கலவரம் குறித்து, விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும், மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த துணை ராணுவத்தை அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்ப ட்டுள்ளது.
நாடெங்கும் உள்ள 22% பள்ளிகளில் மட்டுமே இணையவசதி உள்ளது – ஆன்லைன் வகுப்புகளின் நிலை என்ன?
இந்த மனுவைத் தாக்கல் செய்த அக்னிஹோத்ரி, கடந்தாண்டு மதுரா நீதிமன்றத்தில் மதுராவிலுள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு அருகில் உள்ள மசூதியை அகற்றக் கோரி மனு தாக்கல் செய்திருந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்னிஹோத்ரி தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், மேற்குவங்க மாநிலத்தை சார்ந்த எண்ணற்ற இந்துக்கள், இஸ்லாமியர்களால் தாக்கபட்டுள்ளதகவும், தேர்தலின் போது இந்துக்கள் இஸ்லாமியர்களை ஆதரித்ததற்காக அவர்கள் தாக்க முயல்வதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.