Aran Sei

மரண தண்டனை வழக்குகளை விசாரிக்க இருக்கும் உச்சநீதிமன்றம் – லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவரின் மனுவும் ஏற்பு

credits : the new indian express

செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன், 40 மரண தண்டனை வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட சிறைவாசிகளின் நான்கு மறுஆய்வு மனுக்களும் இந்த பட்டியலில் உள்ளன.

2000 ஆம் ஆண்டு, டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்ற அஷ்பாக்கும் இப்பட்டியலில் உள்ளார்.

செப்டம்பர் 1 முதல், வழக்குகளின் இறுதி விசாரணையை நேரடியாக நீதிமன்றத்தில் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலை வெளியிட்டது. மேலும், செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை, கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து, தேவைக்கேற்ப இணையவழியாகவும் நேரடியாகவும் நீதிமன்ற பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.

கொரோனா தொற்றுநோய் பரவலின் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வீடியோ கான்பரன்சிங் வழியாக உச்ச நீதிமன்றம் வழக்குகளை விசாரித்து வருகிறது. பல பார் கவுன்சில்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நேரடியாக நீதிமன்றத்திலேயே விசாரணைகளை நடத்தும் முறையை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

Source: PTI

தொடர்புடைய பதிவுகள்:

‘மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றக்கூடாது’ – பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்காவில் 70 ஆண்டுகளில் முதல்முறையாக மரண தண்டனை – விஷ ஊசி செலுத்த திட்டம்

போராட்டத்தை ஒருங்கிணைத்தவருக்கு மரண தண்டனை – ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அரசு

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்