Aran Sei

இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்குள்தான் இருக்க வேண்டுமா? – 30 ஆண்டுகால தீர்ப்பை மறுபரிசீலினை செய்ய உச்சநீதிமன்றம் விருப்பம்

ரசாங்க வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில், விளிம்பு நிலை மற்றும் ஏழை மக்களுக்கு 50 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை (முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட தீர்ப்பு) மறுபரிசீலனை செய்ய இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 1992 ஆம் ஆண்டு, இந்திரா சஹானி வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ”கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு தான் விதியாக இருக்க வேண்டும், கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களை மைய நீரோட்டத்திற்கு கொண்டு வருவதற்கான சில விதிவிலக்கான மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே 50 சதவீத விதியை தளர்த்த முடியும்” என்று தெரிவித்தது.

ஆனால், தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா உட்பட சில மாநிலங்கள், இந்த உத்தரவை மீறி, 60 சதவீதத்திற்கும் மேல் இடஒதுக்கீடு வழங்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன.

ஒடிடி தளங்களில் ஆபாசமான படங்கள் வெளியாகின்றன – உச்ச நீதிமன்றம் கருத்து

இந்நிலையில், மகாராஷ்ட்ரா மாநிலத்தில்,  50 சதவீத இடஒதுக்கீட்டை மீறி, மராத்தியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

‘அரசிற்கு எதிரான மாற்றுக்கருத்து தேசதுரோகம் ஆகாது’ – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு வழங்கியுள்ள 50 சதவீத இடஒதுக்கீட்டை மகாராஷ்ட்ரா மட்டும் மீறவில்லை என்பதை சுட்டிக்காட்டியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை விரிவுப்படுத்த வேண்டும் என்று கருதிய நீதிமன்றம், மற்ற மாநிலங்களையும் இந்த வழக்கில் இணைக்க வேண்டும் எனவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டுமா? அல்லது அதை மீறலாமா? என்பதை மாநிலங்கள் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை மார்ச் 15-ல் இருந்து தொடங்கப்படும் எனவும் நீதிபதி அசோக் பூஷன் தெரிவித்துள்ளார்.

கணவன் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் சரி பாலியல் வன்புணர்வு செய்தார் என கூறலாமா ? : உச்ச நீதிமன்றம்

மேலும், இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சில கேள்விகளை தயாரித்துள்ளதாக கூறியுள்ள தி இந்து,  இந்திரா சஹானி வழக்கை, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய, ஒன்பது பேருக்கும் அதிகமான நீதிபதிகளை கொண்டு அமர்வை உருவாக்க வேண்டுமா எனும் கேள்வி இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.

சித்திக் காப்பானுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஐந்து நாட்கள் ஜாமீன்: உச்ச நீதிமன்றம்

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் என்.ஜி.கெய்க்வாட் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையில், 50 சதவீதற்கு அதிகமாக இடஒதுக்கீட்டை அளிக்க, மராட்டிய சமூகம் பின்தங்கியிருப்பது போன்ற அசாதாரண சூழ்நிலையை, போலியாக உருவாக்கி மராத்தியர்களுக்கான தனி இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதா என்ற கேள்வி குறித்து ஆராயலாமா என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

‘போக்சோ’ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி – பதவிக்காலத்தைக் குறைத்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

கடந்த 2018 ஆம் ஆண்டு, மத்திய அரசு உருவாக்கிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை உருவாக்குவது மற்றும் அந்த சமூகத்தை அடையாளம் காணும் உரிமையை, மாநில அரசுகள் இழந்து விட்டனவா எனும் கேள்வி குறித்தும் உச்சநீதிமன்றம் ஆராயவுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்