Aran Sei

‘போக்சோ’ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி – பதவிக்காலத்தைக் குறைத்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

போக்ஸோ (Protection of Children from Sexual Offences) சட்டம் தொடர்பாகச் சர்ச்சைக்குரிய இரு தீர்ப்புகளை வழங்கிய மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கானேடிவாலாவின் பதவிக்காலத்தை ஓர் ஆண்டாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கூடுதல் அமர்வு நீதிபதியாகப் புஷ்பாவை 2 ஆண்டுகள் நியமித்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்த நிலையில் அதை ஓர் ஆண்டாகக் குறைத்துள்ளது.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஜாமீன் – 10 ஆண்டு தண்டனையையும் நிறுத்தி வைத்த மும்பை உயர்நீதிமன்றம்

கடந்த ஜனவரி மாதம் நீதிபதி புஷ்பா கனேடிவாலா அளித்த தீர்ப்பில், “போக்சோ சட்டத்தின் அடிப்படையில் ஒரு குழந்தையை வெறுமனே தொடுவதை, பாலியல் தாக்குதல் என்று கூறுமுடியாது என்றும் மாறாக, பாலியல் உள்நோக்கத்துடன், தோலோடு தோல் உரசினால் மட்டுமே, அவ்வாறு கருத முடியும் என்று நீதிபதி புஷ்பா கனடிவாலா தீர்ப்பளித்துக் குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்தார். அவர் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ. பாப்தே தலைமையிலான அமர்வுத் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.

போக்சோ சட்டத்திற்கு புதிய விளக்கமளித்த நீதிபதி: மீண்டும் சர்ச்சையில் மும்பை உயர்நீதி மன்றம்

அதேபோல் வெறொரு வழக்கில் அவர் அளித்த தீர்ப்பில் “பாதிக்கப்பட்ட மைனரின் கையைக் குற்றம் சாட்டப்பட்டவர் பிடித்ததற்காகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததாலோ சம்மந்தப்பட்ட நபரைப் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும், போக்சோ சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

இந்த இரு தீர்ப்புகளும் சமூகத்தில் பெரும் விவாதத்தை எழுப்பின. இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தேசிய மகளிர் ஆணையமும், குழந்தைகள் உரிமை ஆணையமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

போக்சோ சட்டம்: மும்பை உயர் நீதிமன்றத்தின் விநோத தீர்ப்பு – தடை செய்த உச்ச நீதிமன்றம்

இதற்கிடையே கடந்த மாதம் 20-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, ஆர்எப் நாரிமன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமர்வு, நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமித்துப் பரிந்துரைத்தது.

நீதிபதி புஷ்பா கனேடிவாலா அளித்த இரு தீர்ப்புகளும் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து தங்கள் பரிந்துரையைக் கொலிஜியம் திரும்பப் பெற்றுள்ள்னர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை(நேற்று) மகாராஷ்டிரா அரசு வெளியி்ட்ட அறிவிப்பில், “மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகப் புஷ்பா கனேடிவாலா 2 ஆண்டுகளுக்குப் பதிலாக ஓர் ஆண்டுக்கு மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்” என அறிவித்துள்ளது.

 

Source: PTI

 

.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்