Aran Sei

நிலமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எடியூரப்பா – விசாரணைக்கு தடைவிதித்த உச்சநீதிமன்றம்

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மீதான நில மோசடி வழக்கில் குற்றவியல் விசாரணைக்கு   தடை விதித்து உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

‘மிஸ்டர் எடியூரப்பா, உங்கள் அரசு வேலை செய்கிறதா?’ : சித்தராமையா கேள்வி

 

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா தன் மீதான விசாரணைக்கு தடைகோரிய மனு நிராகரிப்பட்டதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணைக்குத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008-12 ஆண்டு கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா இருந்தபோது பெங்களூருவில் அரசுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தைத் தனது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் சோஹன்குமார் ஆகியோருக்கு நெருக்கமான தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கி மோசடி செய்த‌தாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

‘ஆர்எஸ்எஸ்ஸை விமர்சிக்க காங்கிரஸுக்கு என்ன தகுதி இருக்கிறது – கர்நாடக முதல்வர் எடியூரப்பா

 

இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா காவல்துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டுமென கர்நாடக உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா மாற்றப்படுகிறாரா? – பாஜகவுக்குள் வெடித்த உட்கட்சி மோதல்

இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தன்மீதான விசாரணைக்குத் தடைகோரி எடியூரப்பா உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிப்பட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர்.

SOURCE: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்