Aran Sei

பெகசிஸ் விவகாரம்- வல்லுநர் குழு அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு

பெகசிஸ் உளவு மென்பொருள் வழியாக தொலைபேசிகள் வேவு பார்க்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது தொடர்பாக வல்லுனர்களைக் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்கவுள்ளதாக  உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தி எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா, மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசிகுமார், மார்க்சிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜான் பிரிட்டாஸ் ஆகியோர்  உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து  தொழில்நுட்ப வல்லுநர் குழுவை அமைக்க முடிவு செய்துள்ள உச்சநீதிமன்றம், அடுத்த வாரம் அதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கவுள்ளது.

மேலும், இந்த மனுவை விசாரித்த தலைமைநீதிபதி என்.வி.ரமணா, இந்த வாரத்திலேயே உத்தரவு பிறப்பிக்க விரும்பினோம். ஆனால், குழுவில் இடம்பெற நாங்கள் பரிந்துரை செய்ய நினைத்த சிலர், தனிப்பட்ட காரணங்களுக்காக மறுத்தனர். இதனால், தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிக்க உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 13 அன்று இந்த மனுவின் விசாரணையின்போது ஆஜரான ஒன்றிய அரசின் வழக்கறிஞர், “இந்த விவகாரம் தொடர்பாகப் பிரமாணப் பத்திரம் வாயிலாக பதிலளிக்க இயலாது. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பொது விவாதத்திற்கு உட்படுத்துவது சாத்தியமற்றது”  என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SOURCE:THE INDIAN EXPRESS

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்