Aran Sei

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.

credits : the indian express

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொலை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரும் மனுக்கள்மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் எம்.ஆர். ஷா அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

டெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்

மூன்று நாட்களில் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்க வேண்டும் என இரு தரப்பினரையும் கேட்டுக் கொண்ட நீதிமன்றம், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் செயல்முறையை எளிமைப்படுத்துமாறு ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தாக்குதலால் மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசின் நிதிநிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், கொரோனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ரூ. 4 லட்சம் கருணைத் தொகை வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.

2005 ஆம் ஆண்டின் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 12வது பிரிவின் கீழ், ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான உணவு பாதுகாப்பை உறுதி செய்தல், சுகாதாரம், உள்கட்டமைப்பை அதிகரித்தல், கணிசமான மற்றும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பல நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்

இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் கௌரவ் குமார் பன்சால், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 12(3) ன் கீழ், பேரழிவு காரணமாக உயிரிழந்த ஓவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ. 4 லட்சம் கருணைத் தொகை இழப்பீடு பெற உரிமை உண்டு என வாதிட்டுள்ளார்.

கொரோனா பேரழிவு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 8, 2015 ஆம் தேதி உத்தரவின் படி, பேரழிவு காரணமாக உயிரிழக்கும் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ. 4 லட்சம் கருணைத் தொகை இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் வாதிட்டுள்ளார்.

‘பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தமுஎகச

மற்றொரு மனுதாரர் ரீபக் கன்சால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கொரோனா காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை அனைத்திற்கு முறையான இறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் அவை இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இழப்பீடு பெற முடியும்” என வாதிட்டார்.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கவனித்துக் கொள்ளுமாறு மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும் என கன்சால் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Source : Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்