Aran Sei

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய அகில் கோகோய் – பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட, அஸ்ஸாமை சேர்ந்த செயல்பாட்டாளர் அகில் கோகோய்யின் பிணை மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2019 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கு வகித்ததற்காக, கிருஷக் முக்தி சங்கிராம் சமிதி (கேஎம்எஸ்எஸ்) எனும் விவசாய சங்கத்தின் நிறுவனர் அகில் கோகோய் மீது, 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன . அதில் ஒரு வழக்கைத் தவிர, தேசிய புலானாய்வு அமைப்பு தாக்கல் செய்த மற்றொரு வழக்கு உட்பட மற்ற அனைத்து வழக்குகளிலும் அகில் பிணை பெற்றுள்ளார்.

சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர் அகில் கோகோய் பிணை மனு – ரத்து செய்த கௌஹாத்தி உயர் நீதிமன்றம்

தற்போது, பிணை மறுக்கப்பட்ட வழக்கானது, முதலில் கௌஹாத்தியில் உள்ள சந்த்மாரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு பின்னர் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. அவ்வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (UAPA), அவர் மீது தேசத்துரோகம், குற்றச் சதி, பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து, பிணை கோரி அவர் தாக்கல் செய்த மனுவை, அசாம் மாநிலத்தின் உயர் நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் குளறுபடி – குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமீன்

இந்நிலையில், இன்று (பிப்பிரவரி 11), உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, சூர்ய காந்த் மற்றும் அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன், பிணை கோரும் அகில் கோகோய்யின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “இச்சூழலில் நாங்கள் இந்த மனுவை பரிசீலிக்க மாட்டோம்.” என்று பிணைக்கு மறுப்பு தெரிவித்து, நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், வழக்கு விசாரணைகள் தொடங்கியவுடன், மனுதாரர் பிணை கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று, வழக்கறிஞர் ருனமோனி பூயானிடம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்