Aran Sei

பெகசிஸ் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் உச்சநீதிமன்ற அதிகாரிகள் பெயர்கள்  – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியின் பெயரும் இடம்பெற்றுள்ளது

credits : the new indian express

பெகசிஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் உச்சநீதிமன்ற அதிகாரிகள் மற்றும் முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ராவின் செல்போன் எண்கள் இடம்பெற்றுள்ளதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தின் தயாரிப்பான பெகசிஸ் உளவு மென்பொருள் கொண்டு உலக நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், நீதித்துறையினர் மற்றும் தொழிலதிபர்கள் வேவு பார்க்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது.

என்.எஸ்.ஓ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களால் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியல் என்று கசிந்த தரவுகளை அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாபநோக்கமற்ற ஊடக நிறுவனமான ஃபர்பிடன் ஸ்டோரீஸ் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்தது.

‘நீங்கள் எங்களை வெளியேற்றலாம் மௌனிக்க வைக்க முடியாது’ – பெகசிஸ் விவாதம் கோரிய திரிணாமூல் உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

ஆய்வு முடிவுகள் இந்தியாவின் தி வயர் இணையதளம் உள்ளிட்ட 17 ஊடகங்களுடன் பகிரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பட்டியலில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ரிட் மனுக்களை பதிவு செய்ய பிரிவில் பதிவாளர்களாக இருக்கும் என்.கே. காந்தி மற்றும் டி.ஐ. ராஜ்புட் ஆகியோரது எண்கள் இடம்பெற்றுள்ளன.

இவர்களது எண்கள் அந்த பட்டியலில் இணைக்கப்பட்ட காலத்தில், மற்ற ஆண்டுகளை விட அதிகமாக 1,000 ரிட் மனுக்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பதியப்பட்டன. அதில் பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை.

கடந்த மூன்றாண்டில் ஜம்மு காஷ்மீரில் 2,300 க்கும் மேற்பட்டோர் உபா சட்டத்தில் கைது – காவல்துறை தகவல்

இதேப்போன்று அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த அருண் மிஸ்ராவி செல்போன் எண்ணும் இதில் இனைக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற்ற நீதிபதியின் அருண் மிஸ்ராவின் எண் அந்த பட்டியலில் 2019 ஆம் ஆண்டு அந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உள்ள அருண் மிஸ்ரா, வேவு பார்க்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த குறிப்பிட்ட எண்ணை ஏப்ரல் 21, 2014 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாகவும், அதை செல்போன் நிறுவனத்திடம் திருப்பி அளித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்