Aran Sei

மோடியை விமர்சித்ததாக தேசத்துரோக புகார் அளித்த பாஜகவினர் – புகாரை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

மாச்சல பிரதேச மாநிலம் சிம்லா பகுதியைச் சார்ந்த பத்திரிக்கையாளர் வினோத் துவா மீதான தேசத்துரோக வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பத்திரிக்கையாளர் வினோத் துவா அவரது யூடூப் தொலைக்காட்சியில் மோடி வாக்குளைப் பெற மரணங்கள் மற்றும் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதாக குற்றச்சாட்டியிருந்ததாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த அஜய் ஷியாம் என்பவர் கடந்தாண்டு இந்த புகாரை அளித்திருந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

திரிபுராவில் பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த தலைமைச் செயலாளர்: நோட்டீஸ் அனுப்பிய இந்திய பிரஸ் கவுன்சில்  

மேலும், கடந்த மார்ச் 30 2020 அன்று, ஒளிபரப்பான அந்தக் காணொளி குறித்து பிரிவு 124ஏ(தேசத்துரோகம்), பிரிவு 268, பிரிவு 501 மற்றும் பிரிவு 505 ஆகியவற்றின் கீழ் அஜய் ஷியாம் வினோத் துவா மீது புகார் அளித்திருந்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது,” எந்த பத்திரிகையாளர் தனது துறையில் 10 வருட அனுபவம் பெற்றுள்ளாரோ, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியக்கூடாது. வல்லுநர் குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுகிறேன்” என்று வினோத் துவா கூறியிருந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊபா சட்டத்தில் கைதான பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன்: 5000 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த காவல்துறை

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி யூ.யூ.லலித் மற்றும் வினீத் சரண் அகையோர் அடங்கிய அமர்வு, வினோத் துவாவின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்ததாகவும், அவர்மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை நீக்கி உத்தரவிட்டுள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

கடந்த 20 ஜூலை 2020 அன்று, வினோத் துவா மீது பதியப்பட்ட தேசத்துரோக வழக்கின் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாதென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்