Aran Sei

கொரோனா பரவலை தடுக்க தகுதியான கைதிகளுக்கு ஜாமீன் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிறைகளில் கொரோனா பரவல் அதிகரிப்பதை தவிர்க்கத் தகுதிவாய்ந்த கைதிகளை ஜாமீனில் வெளிவிடுமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்களைத் தானாக முன்வந்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.

அந்த வகையில், சிறைகளில் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.

ஆளும் மாநிலங்களில் தேயும் பாஜக; தேர்தல்கள் சொல்லும் உண்மை – சரத் பிரதான்

”கொரோனா தொற்றின் தாக்கதால் நாடே அபாயகரமான சூழலில் இருக்கிறது. இது போன்ற சூழ்நிலைகளில் சிறைகளில் பெருந்தொற்று பரவாமல் பாதுக்காக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை.” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே ஜாமீன் மற்றும் பரோலில் செல்லத் தகுதியுடைய சிறைக் கைதிகளை விடுவிக்க மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

‘நேரு, இந்திரா, ராஜிவ், மன்மோகன் உருவாக்கிய கட்டமைப்பால் தப்பிப்பிழைக்கும் இந்தியா’ – கொரோனா பேரிடர் குறித்து சிவசேனா

ஜாமீனில் விடுவிக்கப்படும் கைதிகளுக்குப் போக்குவரத்து வசதிகளையும் மாநில அரசு மற்றும் சிறை நிர்வாகமே ஏற்படுத்தித் தர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பொருந்தொற்றில், சிறைகளில் நெருக்கடி ஏற்படாமல் இருக்க கைது நடவடிக்கைகளைக் குறைத்து கொள்ளுமாறும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து தகுதி வாய்ந்த சிறைக் கைதிகளை ஜாமீனில் விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நாடு முழுவதும் சிறைகளிலிருந்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பின்னர், ஜாமீன், பரோல் காலம் முடிவடைந்ததும் அவர்கள் சிறைக்கு திரும்பினர்.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்