Aran Sei

கணவன் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் சரி பாலியல் வன்புணர்வு செய்தார் என கூறலாமா ? : உச்ச நீதிமன்றம்

”கணவன் மனைவியாக இருவர் வாழ்ந்து கொண்டிருக்கையில், கணவன் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் சரி, அவர்களிடையே நடந்த உடலுறவை பாலியல் வன்புணர்வு என்று அழைக்க முடியுமா” என உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு, ஒரு பெண், தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த வினய் பிரதாப் சிங் எனும் நபர், தன்னை ஏமாற்றி விட்டு வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாதாகவும், அவர்கள் காதலித்து வந்த சமயத்தில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வினய் பிரதாப் சிங் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணக்கு வந்துள்ளது.

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு – வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

வினய் பிரதாப் சிங் தாக்கல் செய்த மனுவில், இருவரும் புரிந்துணர்வுடன் தான் உடலுறவு வைத்து கொண்டடோம் என்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை, காதலித்து கொண்டு தான் இருந்தோம் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

போக்சோ சட்டம்: மும்பை உயர் நீதிமன்றத்தின் விநோத தீர்ப்பு – தடை செய்த உச்ச நீதிமன்றம்

இதை கடுமையாக எதிர்த்த பெண்ணின் வழக்கறிஞர், வினய் கல்யாணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததாகவும், கல்யாண முன் ஏற்பாடுகள் கோயில் ஒன்றில் அரங்கேறியதாகவும் வாதாடியுள்ளார். மேலும், அந்த பெண்ணை வினய் பிரதாப் சிங், கடுமையாக துன்புறுத்தியதாகவும், அதற்கான மருத்துவ ஆவணங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் – குற்றவாளியையே திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் நீதிமுறை

இதற்கு பதிலளித்த வினய் பிரதாப் சிங்கின் வழக்கறிஞர், அந்தப் பெண் வேறோரு நபருடன் தொடர்பில் இருந்ததாகவும், பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு வினய் பிரதாப் சிங்-ஐ இழிவுப்படுத்த சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

‘தாண்டவ்’ வெப் சீரிசை தொடர்ந்து ‘மிர்சாப்பூர்’ தொடருக்கு எதிர்ப்பு – தடை செய்ய கோரும் மனுவில் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ”ஒரு பெண்ணும் ஆணும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழும்போது, தவறான முறை (கல்யாணம் செய்து கொள்ளாமல்) என்றாலும் கூட, கணவன் கொடூரமாக இருக்கலாம், பல தவறுகளை கூட செய்யலாம், அதை பாலியல் வன்புணர்வு என்று அழைக்க முடியுமா?” என்று கேள்வியெழுப்பியுள்ளதாக என்டிடிவியின் செய்தி கூறுகிறது.

’விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க முடியாது’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு

மேலும் ”கல்யாணம் செய்து கொள்கிறோம் என்ற பொய்யான சத்தியம் செய்வது தவறு. ஆண் பெண் என்கிற பேதமின்றி யாரும் பொய்யான சத்தியத்தை செய்ய கூடாது. கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று பெண் பொய் சத்தியம் செய்தாலும் தவறு தான்” என்று நீதிபதி தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அமைத்த குழுவிலிருந்து புபிந்தர் சிங் விலகல் – போராடும் விவசாயிகளோடு நிற்பதாக கருத்து

பெண்ணுக்கு வேறோரு நபருடன் தொடர்பில் இருக்கிறார் என்று சிங்கின், மனுவில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி பேசிய நீதிபதி, ”பாதிக்கப்பட்டிருக்கும் பெண்ணை. இவ்வாறு கூறக் கூடாது” என்று கூறி, வினய் பிரதாப் சிங்கின் கைதுக்கு தடை விதித்துள்ளார்..

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்